செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வு: மெட்ரோ ரெயில், நாளை 6 மணிக்கே இயக்கப்படுகிறது

நாளை சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வசதியாக காலை 6 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற ஆட்சிப் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்வு நாடு முழுவதும் 72 நகரங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடக்கிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வசதியாக அந்தந்த நகரங்களில் போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

சென்னையில் செனாய் நகரில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையும் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கமாக காலை 8 மணி முதல்தான் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

நாளை சிவில் சர்வீஸ் எழுத வரும் மாணவர்களுக்கு வசதியாக காலை 6 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.