செய்திகள்

விமானத்தில் தகராறு - ரகளையில் ஈடுபடும் விமான பயணிகளுக்கு 2 ஆண்டு தடை: மத்திய அரசு

விமான பயணத்தின் போது சக பயணிக்ளுக்கு இடையூராக தகராறு மட்டும் ரகளையில் ஈடுபடும் நபர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

விமான பயணத்தின் போது சில பயணிகளின் தவறான செயல்களால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. சமீபத்தில் சிவசேனா எம்.பி. விமான பயணத்தின் போது ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து விமான பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விதித்துள்ளது.

இது தொடர்பாக விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதிராஜூ கூறியதாவது:-

விமான பயணத்தின் போது தகராறு செய்யும் பயணிகளுக்கு 3 கட்டமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி விமான பயணத்தின் போது மற்றவர்களை மிரட்டினால் முதல் கட்டமாக 3 மாதம் விமான பயணத்துக்கு தடை விதிக்கப்படும்.

2-வது கட்டமாக பாலியல் தொல்லை கொடுத்தால் 6 மாதம் தடை விதிக்கப்படும்.  3-வது கட்டமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் 2 வருடத்துக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.