செய்திகள்

பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை

தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே தனது தற்கொலைக்கு காரணம் எனக்கூறி 2 பக்க கடிதமும் எழுதி இருந்தார். இதுபற்றி சசிகுமார் அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார், அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அன்புச் செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸ் தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன. அவரது மறைவிடம் குறித்து அறிந்துகொள்வதற்காக அவரது நண்பரையும் தேடி வந்தனர்.