2017-18 சீசனுக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. தேவையில்லாத வீரர்களை நீக்கியும், தேவைப்படும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையிலும் அணிகள் களம் இறங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின். இவரை 2021-22-ம் ஆண்டு சீசன் வரை ஐந்து ஆண்டுகளுக்கு பிரிஸ்பேன் ஹீட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கிறிஸ் லின்னிற்கு அந்த அணி வருடத்திற்கு தலா ஒரு மில்லியன் டாலர் சம்பளமாக கொடுக்கிறது.