விபத்து 
செய்திகள்

சித்தோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

சித்தோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சித்தோடு:

பவானி, சித்தோடு, நசியனூர் அருகிலுள்ள சாமிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன் மகன் பழனிச்சாமி (வயது 52). நேற்று இரவு பழனிச்சாமி டி.வி.எஸ். எக்ஸ்.எல். மொபெட்டில் வந்து கொண்டு இருந்துள்ளார்.

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை சாமி கவுண்டன் பாளையம் பிரிவு பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லோடு ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

மேலும் அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் மனைவி இருவர் மீதும் மோதியது.

இதில் கணவன்-மனைவி இருவரும் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.