லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் சகாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் சிராங் பல சாதனைகளை படைத்து வருகிறான். இந்நிலையில், சிறுவன் சிராங் 20 கோடி வரை பெருக்கல் வாய்ப்பாட்டை ஒப்பித்து அசத்தியுள்ளான்.
இதுகுறித்து பேசிய சிராங், 'நான் சிறந்த விஞ்ஞானியாக வளர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். எங்கள் கிராமத்திற்கு முதல்-மந்திரி யோகிநாத் மற்றும் பிரதமர் மோடியை வரும்படி அழைப்பேன்' என கூறினான். மிகவும் சிறு வயதில் இத்தகைய சாதனை புரியும் சிராங்கின் திறமையை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
‘நாங்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் சிராங்கின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் நாங்கள் செய்வோம். கண்டிப்பாக அவன் நாட்டிற்கு பெருமையை சேர்ப்பான்’ என சிராங்கின் தந்தை நரேந்திர சிங் கூறினார்.