தற்கொலை 
செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை

சிந்தாதிரிப்பேட்டை அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிருஷ்ணப்பா செட்டி தெருவை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (வயது 27). இவர் பி.காம் படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக, தனக்கு வேலை கிடைக்கவில்லை என மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சீனிவாச ராவ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT