விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நிர்மல்(வயது 48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 14-ந் தேதி பள்ளியில் ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோர் காதலர் தினத்தை கொண்டாடினார். அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 13 வயதுமாணவியை தனது அறைக்கு ஆசிரியர் நிர்மல் அழைத்தார். அந்த மாணவியிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி ரோஜா பூ ஒன்றை கொடுத்தார். மேலும் மாணவி கையை பிடித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அழுது கொண்டே வகுப்பறைக்கு சென்றார். இதைஅறிந்த அந்த பள்ளி ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான் பிரான்சிஸ்(40) ஆகியோர் அந்த மாணவியை அழைத்து, ஆசிரியர் நிர்மல் ரோஜா பூ கொடுத்து காதலை தெரிவித்தது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது அவ்வாறு கூறினால் இந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என்று கூறி மிரட்டினர்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த மாணவி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் மற்றும் மேல்நாரியப்பனூர் பகுதி பொதுமக்கள் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியிடம் ரோஜா பூ கொடுத்த ஆசிரியர் நிர்மலையும், அதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது ஆசிரியர் நிர்மல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆசிரியர் நிர்மலுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ்.
தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களிடமிருந்து ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோரை மீட்டனர்.
பின்னர் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.