செய்திகள்

சின்னவீராம்பட்டினத்தில் 9-ம்வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை

சின்னவீராம்பட்டினத்தில் பெற்றோர் சண்டையால் 9-ம்வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

பாகூர்:

புதுவை சின்னவீராம்பட்டினம் மறைமலைஅடிகள் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம், மீனவர். இவரது மகள் காயத்திரி (வயது14). இவர் மணவெளியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி கோடை விடுமுறையில் காயத்திரி வீட்டில் இருந்து வந்தார்.

இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கம் உள்ள நாகலிங்கம் அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனை காயத்திரி பலமுறை கண்டித்தும் நாகலிங்கம் இதனை காதில் போட்டு கொள்ளாமல் தொடர்ந்து தினமும் மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.

இதுபோல நேற்றும் இரவும் நாகலிங்கம் மது குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டார். இதனால் காயத்திரி மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.