செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன ராணுவ வீரர்கள் நடமாட்டம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் சீன ராணுவ வீரர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் பரகோட்டி என்ற பகுதியின் எல்லைப் பகுதியில் ஜூலை 25-ம் தேதி காலை சிலர் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சீன ராணுவ வீரர்கள் சிலர் எல்லையிலிருந்து இந்திய பகுதிக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்ளே வந்து முகாமிட்டிருப்பதை பார்த்தனர். ஆடு மேய்ப்பவர்களை கண்ட சீன வீரர்கள் அவர்களை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பரகோட்டி பகுதியில் ராணுவ பாதுகாப்பு குறைவாக இருப்தால் சீன ராணுவ வீரர்கள் உள்ளே வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT