பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை
இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக சீனா சூப்பர்சானிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. #BrahMosmissile #supersonicmissile
மாலை மலர்
சீனாவில், சூப்பர்சானிக் எச்டி-1 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம், இந்த சோதனையை நடத்தியது. அந்நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது.