இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் கொரியா போன்ற நாடுகளில் நிலவும் பயங்கரவாதம் தொடர்பாக இக்கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
கூட்டத்திற்கு முன் சுஷ்வா சுவராஜ், இரு தலைவர்களுடன் தனித்தனியே சந்தித்து பேசுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாய் யி சந்தித்தனர். டோக்லாம் பிரச்சனைக்கு பிறகு சீன தலைவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவ் நேற்று புதுடெல்லி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.