கொரோனா வைரஸ் 
செய்திகள்

பீஜிங்கில் 23 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - ‘பெப்சி’ கம்பெனி பணிகள் நிறுத்தம்

பீஜிங்கில் 23 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ‘பெப்சி‘ கம்பெனியின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மாலை மலர்

சீன தலைநகர் பீஜிங்கில் பன்னாட்டு குளிர்பான கம்பெனியான ‘பெப்சி‘யின் கிளை உள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ‘பெப்சி‘ கம்பெனியின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவில், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டது.