வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் 
செய்திகள்

கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் - வடகொரியாவுக்கு மருத்துவ குழுவை அனுப்பியது சீனா

கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. கடந்த 15-ந்தேதி நடைபெற்ற வடகொரியாவின் நிறுவனரும், தனது தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொள்ளவில்லை.