பீஜிங்:
இந்தியா - சீனா எல்லையில் போர் பீதி நிலவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சீனர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஜுலை மாதம் 7-ம் தேதி, சீனா அறிவுரை வழங்கியிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் இருக்கும் சீனர்களுக்கு மீண்டும் அந்நாட்டு அரசு, ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவில் இயற்கைப் பேரிடர்கள், போக்குவரத்து விபத்துகள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் சீனர்கள் அடிக்கடி இந்தியாவிற்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும் சீனா தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா வரும் பயணிகள், தங்கள் தனிப்பட்ட அடையாள கோப்புகளை எப்பொழுதும் வைத்து கொள்ளவும், இந்தியாவின், மத பழக்கங்களை பின்பற்றுமாறும் அறிவுருத்தி உள்ளது. மேலும் தங்கள் பயண விபரம் குறித்து, உறவினர்கள், நண்பர்கள், உடன் பண்புரிபவர்கள் ஆகியோரிடத்தில் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளது.