விமானப்படை தளபதி பதாரியா 
செய்திகள்

விமானப்படை பலத்தில் சீனா இந்தியாவை மிஞ்ச முடியாது: விமானப்படை தளபதி பதாரியா

சீனா நமது விமானப்படை பலத்தை மிஞ்ச முடியாது, இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறியதாவது:-

எல்லையில் எந்த முனையில் இருந்து ஆபத்துக்கள் வந்தாலும். அதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது. பேச்சுவார்த்தைகளை பொறுத்தே அது அமையும். எல்லையில் படைகளை பின்வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

லடாக்கில் அடுத்த 3 மாதங்கள் குளிர் இருக்கும். அவற்றை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் உள்ளன. நம்மை எதிர்க்க பாகிஸ்தானை பயன்படுத்த சீனா நினைத்தால், அது அவர்களுக்குதான் போதாத காலமாகும். பாகிஸ்தானின் ஸ்கர்டு தளத்தை சீனா பயன்படுத்தினால், அது அவர்களுக்கு பெரிய ஆபத்து. அதற்கேற்ப இந்தியா செயல்படும்.

எதிரியை எதிர்க்கும் அளவில் நம் படைகள் தயார் நிலையில் உள்ளன. சீனா நம் வான் பலத்தை மிஞ்ச முடியாது. இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT