எதிர்பார்த்தபடி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி நுழையாத நிலையில் கேப்டன் மட்டும் தனது பதவியில் தொடரலாம் என்பது தவறான ஒன்றுதான்.
கேப்டனாக விராட் கோலி நீடிக்கலாமா? என்பது குறித்து பேசுவதற்கு கமிட்டி கூட்டப்படாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான வீரர்களை தேர்வு செய்ய கூடியதில் இருந்து, விராட் கோலி அவருடைய அணிக்கு கேப்டனா? அல்லது அவர் கேப்டனாக இருப்பதில் தேர்வுக்குழுவுக்கு மகிழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
விரைவில் புதிய தேர்வுக்குழு அமைய இருக்கிறது. வருங்காலத்தில் வீரர்கள் ஆதிக்கம் இல்லாமல், தேர்வுக்குழு தேர்வு செய்யும் வீரர்களோடு விளையாடும் அணி நிர்வாகம் அமையும் என நம்புவோம்' என குறிப்பிட்டிருந்தார்.
200 முதல்தர போட்டிகளை எங்கள் சமகாலத்தில் கண்டுள்ளோம். இதைவிட அணி தேர்வுக்கு அனுபவம் தேவையில்லை. இதுவே போதுமானது. அணி தேர்வுக்குழு குறித்து கவாஸ்கர் கூறிய கருத்து துரதிஷ்டவசமானது. ஆனால், நாங்கள் அனுபவ வீரர்களை மிகவும் மதிக்கிறோம். அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படும். ஏற்றுக்கொள்ளப்படும்.
அதேசமயம் குழுவை புண்படுத்தும்படி வரும் கருத்துக்களால் தேர்வுக்குழு மேலும் பலமடையும். இதனால் எங்கள் ஒற்றுமைதான் இன்னும் அதிகரிக்கும்' என கூறியுள்ளார்.