சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வருகிற 19-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை 12 நாட்கள் பொது ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
21 மற்றும் 28-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமறுநாள் பொது ஊடரங்கு மீண்டும் தொடங்கும் நிலையில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், ‘‘பொதுமுடக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.