ப.சிதம்பரம் 
செய்திகள்

எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு - ப.சிதம்பரம்

எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இந்தியா முழுவதும் 74வது சுதந்திரதினம் இன்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாட்டு மக்களுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நேபாளம், ஆஸ்திரேலிய பிரதமர்களும், இந்தியாவுக்கான சீன தூதர்  போன்றவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை.

எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்".

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம் அல்லது விடுதலை என்பது
அச்சத்திலிருந்து விடுதலை,
வறுமையிலிருந்து விடுதலை,
அடக்குமுறையிலிருந்து விடுதலை

எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்