செய்திகள்

அரியானா கலவரத்துக்கு பா.ஜனதாவை விமர்சிப்பதா? ப. சிதம்பரம் மீது தமிழிசை பாய்ச்சல்

அரியானாவில் நடந்துவரும் கலவரங்களுக்கு பா.ஜனதாவின் சரியில்லாத நிர்வாகமே காரணம் என்று ப.சிதம்பரம் குற்றச்சாட்டிற்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

உ.பி. மாநிலம் கோரக்பூர் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இறந்தது. அரியானாவில் நடந்துவரும் கலவரங்களுக்கு பா. ஜனதாவின் சரியில்லாத நிர்வாகமே காரணம் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பதாவது:-

60 ஆண்டுகால காங்கிரஸ் நிர்வாகம் துருப்பிடித்து, அழுகிப்போனது. மொத்த சீரழிவுக்கும் காங்கிரசே காரணம்.

அவர்கள் ஆட்சியில் விபத்துகள் நடக்க வில்லையா? ஆஸ்பத்திரி மரணங்கள் நடக்க வில்லையா? வன்முறைகள் எதுவும் நடந்ததில்லையா?

பாராளுமன்றத்திலேயே முக்கியமான நிலக்கரி ஊழல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது. பட்ஜெட் நகல்கள் முன்கூட்டியே வெளியானது. பல்வேறு ஊழல்கள் இவைதானே காங்கிரஸ் ஆட்சியின் ஹால்மார்க் முத்திரை. இதுதான் காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாக லட்சணம்.

இப்படிப்பட்ட துருப்பிடித்த நிர்வாகத்துக்கு சொந்தக்காரர்களான இவர்கள் பா.ஜனதாவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.

தமிழ் மீது கொண்ட அளவற்ற காதலால் இந்தியை எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

இதே காதல் தாங்கள் நிறுவனங்களுக்கு பெயர் சூட்டும் போது மறந்து போனது ஏனோ?

இவ்வாறு அவர் கூறினார்.