புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களுக்கான பிரிவு உபச்சார விழா அடுத்த மாதம் 7-ம் தேதி நடக்க உள்ளது. இதில், கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரனாப் முகர்ஜியும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், “ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்துள்ளது, பிரணாப் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இனி, அதை விவாதிப்பது பொருட்டல்ல. அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களின் சித்தாந்தத்தில் உள்ள தவறுகளை எடுத்துச்சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.