மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்டுகளாகவும், மாவோயிஸ்ட்டுகளாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இதைதொடர்ந்து அப்பகுதிக்கு இன்று விரைந்து சென்ற போலீசார் காட்டுக்குள் மறைந்திருந்த நக்சலைட்டுகளை சுற்றிவளைத்தனர்.
அப்போது, அங்கு கும்பலாக இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி தந்ததில் சிலர் தப்பியோடினர்.
அவர்களை விரட்டிச் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் இரு நக்சலைட்டுகளை கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள், பைப் குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.