செய்திகள்

ராஜினாமா செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகிய செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். #ChevellaMP #KondaVishweshwarReddy #RahulGandhi

மாலை மலர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 113 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில் அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி  கட்சியில் இருந்து  செவ்வாலா தொகுதி எம்.பி. கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி நேற்று ராஜினாமா செய்தார்.

அவரை தொடர்ந்து மேலும் சில எம்.பி.க்கள் விலகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விலகிய கொன்டா விஷ்வேஷ்வர் ரெட்டி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.