நெல்லை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நாளை நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆர். சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- பாபா அபராஜித் தலைமையிலான திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நெல்லை ஐ.சி.எல். மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த முறை 2-வது இடம் பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தற்போது தலைவன் சற்குணம், கோபிநாத், அந்தோனிதாஸ், சாய்கிஷோர், அலெக்சாண்டர் யோமகேஷ் சத்யமூர்த்தி, சரவணன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
19-வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் விளையாடிய எஸ். ராதா கிருஷ்ணன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கடந்த சீசனில் திருவள்ளூர் அணியை 41 ரன் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர்கில்லீஸ் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.
திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் பாபா அபராஜித், அபிஷேக் தன்வார், ராஹில் ரா, என்.எஸ். சதுர்வேத். ஐகன்நாத் ஸ்ரீநிவாஸ் போன்ற வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதாலும் தொடந்து ஆட்டத்தில் வெற்றிகணக்கை தொடங்க முயற்சிக்கும் என்பதாலும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.