செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்தில் சென்னை - டெல்லி இடையிலான போட்டி சமனில் முடிந்தது

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #ISL2017 #chennaiyinfc #delhidynamos

மாலை மலர்

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 59-வது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணி சார்பில் கலு உசே முதல் கோல் அடித்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் சென்னையின் எப்.சி. அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சூடு பிடித்தது.

ஆட்டம் முடியும் வரை அடுத்த கோலை எந்த அணியும் அடிக்கவில்லை. இதையடுத்து, சென்னையின் எப்.சி. மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, சென்னையின் எப்.சி. அணி 14 போட்டிகளில் 7 வெற்றியுடன் 24 புள்ளிகள் பெற்று பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.