சென்னை:
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்(43). இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். கொரோனாவுக்கு தமிழகத்தில் முதன் முதலாக பத்திரிகையாளர் ஒருவர் பலியாகி உள்ளார்.
அவரது மரணத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.