செய்திகள்

சென்னையில் ‘புரோகபடி’ இறுதிப்போட்டி

5-வது புரோ கபடி ‘லீக்’ சீசன் போட்டி ஜூலை 28-ந்தேதி தொடங்கி அக்டோபர் 28-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணை மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது.

மாலை மலர்

மும்பை:

5-வது புரோ கபடி ‘லீக்’ சீசன் போட்டி குறித்த அட்டவணை மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தப்போட்டி ஜூலை 28-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 28-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

இந்தப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது .

‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங், பாந்தர்ஸ், புனே ரிபல்தான் யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெய்ன்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், பாட்னா பிரேட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ், உ.பி.யோதாஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டிக்கு மூன்று குவாலிபையர் ஆட்டமும், இரண்டு எலிமினேட்டர் ஆட்டமும் நடைபெறும்.

புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இறுதி ஆட்டம் அக்டோபர் 28-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதுதவிர ‘எலிமினேட்டர் 2’ ஆட்டமும் சென்னையில் அக்டோபர் 26-ந்தேதி நடக்கிறது. ஜூலை 28-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டான்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் முதல் ஆட்டம் செப்டம்பர் 30-ந்தேதி நடக்கிறது.