செய்திகள்

உலக ‘கிக் பாக்சிங்’ - சென்னை மாணவருக்கு தங்கப்பதக்கம்

ரஷியாவில் நடந்து வரும் உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ விளையாட்டு போட்டி ரஷியாவில் அனப்பா நகரில் நடந்து வருகிறது. இதில் 55 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 80 கிலோவுக்கு கீழ் உள்ள எடைப் பிரிவில் சென்னை மாணவர் ஏ.பி.வசீகரன் பங்கேற்றார். இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோல் 75 கிலோ எடை பிரிவில் அருண் தனுஷ்க் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற வசீகரன் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

நாளை சென்னை திரும்பும் வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.