சென்னை:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மர்ம போன் வந்தது. அதில் பேசிய வாலிபர், “ராஜீவ்காந்தியை கொலை செய்தது போல பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்படுவதாக 2 பேர் பேசிக் கொண்டு இருந்தனர்” என்று தெரிவித்தார். பின்னர் அவர் போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மிரட்டல் போன் வந்த தொலைபேசி எண்ணை வைத்து துப்பு துலக்கப்பட்டது.
அப்போது திருவான்மியூரில் அந்த வாலிபர் பேசியது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெயர் திருநாவுக்கரசு என்பது தெரியவந்தது. அவரிடம் மிரட்டல் விடுத்தது ஏன் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி சென்னையில் ஐ.ஐ.டி. விழாவில் பங்கேற்ற நிலையில் சென்னை போலீசுக்கு வந்து இந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.