சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மிலாது நபி தினத்தை முன்னிட்டு நவம்பர் 10-ம் தேதி மதுபான சில்லறை விற்பனை கடை, பார் கிளப்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது. அனைத்தும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.