சென்னை:
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர். 70 பள்ளிகளில் படித்த 6302 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.1 சதவீதமாகும்.
2697 மாணவர்களும் (89.04 சதவீதம்) 3168 மாணவிகளும் (96.79) வெற்றி பெற்றுள்ளனர். 20 மாநகராட்சி பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தவிர மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் பாட வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கணிதம் பாடத்தில் 8 பேரும், அறிவியல் பாடத்தில் 28 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 153 பேரும் சென்டம் வாங்கியுள்ளனர்.
400-க்கு மேல் 1267 பேரும் 450-க்கு மேல் 312 பேரும் மார்க் எடுத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.
100 சதவீதம் தேர்ச்சி அடைந்த மாணவ -மாணவியரையும், பள்ளி தலைமை ஆசிரியர்களையும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற உழைத்த ஆசிரியர்களையும் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
மாநகராட்சி பள்ளிகள் கடந்த ஆண்டு 94.93 சதவீதம் தேர்ச்சி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.