சென்னை பஸ்சில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
செய்திகள்

ஆந்திராவில் இருந்து வந்த சென்னை பஸ்சில் ரூ. 92 லட்சம் சிக்கியது

ஆந்திராவில் இருந்து வந்த சென்னை பஸ்சில் ரூ. 92 லட்சம் சிக்கிய சம்பவம் தொடர்பாக வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது.

இன்று காலை கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ்சில் சோதனையிட்டனர். இதில் ஒரு பயணி இரண்டு பெரிய பைகளுடன் சந்தேகத்திற்கிடமாக இருந்தார்.

அவரது பைகளை சோதனையிட்ட போது கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ. 92 லட்சம் இருந்தது. இந்த பணத்துக்கான ஆவணம் அவரிடம் இல்லை.

இதையடுத்து ரூ. 92 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பணத்துடன் வந்தவர் ஆந்திர மாநிலம் சிலுக்கூர் பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி சாம்பசிவ ராவ் என்பது தெரிந்தது.

சென்னையில் நகை வாங்க பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.