செய்திகள்

சென்னையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியதால் 112 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியதால் 112 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றிரவு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இந்த நேரத்தில் மின்விநியோகம் செய்தால் அது பாதுகாப்பாக இருக்காது என மின்சாரம் வாரியம் எண்ணுகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்ததுதான் இதற்கு காரணம்.