போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 
செய்திகள்

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களும், வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மாத இறுதியில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் ஊதியத்தை அளிக்வில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பணிமனையில் இருந்து பேருந்துகளை எடுக்க மறுத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தி ஈடுபட்டுள்ளனர்.