சென்னை:
பாரதிய ஜனதா வெளி நாடு வாழ் தமிழர் அணி மாநில தலைவர் அ.சொ.முத்துக்கண்ணன், விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், நானும் 4 தினங்கள் இலங்கை சென்று தமிழ் மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை பெற்று பரிசீலித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கும் யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேரடியாக விமானசேவை செய்துதர வேண்டும் என்று கடிதம் எழுதினோம்.
இதனை பிரதமரும், மத்திய அரசும் பரிசீலனை செய்து யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடியாக விமான சேவை அறிவிக்கப்பட்டு சேவை தொடங்குகிறது. இதற்காக தமிழக பா.ஜனதா சார்பில் பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.