செய்திகள்

செங்கத்தில் மர்ம கும்பல் தாக்கியதில் காயமடைந்த பெண் மரணம்

செங்கத்தில் மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கம்:

செங்கம் அருகே உள்ள காயம்பட்டு கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜிதா (வயது 56). இவரும், அவரது பேத்தி ரிஷ்வானாவும் (8) கடந்த 13-ந் தேதி வீட்டில் தூங்கிக் கெண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஷாஜிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரிஷ்வானா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாள்.

இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT