செய்திகள்

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: தொலைக்காட்சி உரிமம் மூலம் செல்சியாவிற்கு 1243.15 கோடி ரூபாய்

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செல்சியாவிற்கு 1243.15 கோடி ரூபாய் தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்துள்ளது.

மாலை மலர்

இங்கிலாந்தில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் நடைபெறும். இந்த தொடரில் அந்நாட்டின் முன்னணியான 20 கிளப்புகள் இடம்பெறும். இந்த கிளப் அணிகள் தங்கள் சொந்த மைதானத்தில் ஒருமுறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் என மற்ற அணிகளும் தலா ஒருமுறை மோதும். அதன்படி ஒவ்வொரு அணியும் 38 போட்டிகளில் விளையாடும். இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் கிளப் போட்டியில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடர்தான் மிகவும் பிரபலமானது. இந்த போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் வந்து பார்ப்பார்கள். கோடிக்கணக்கான மக்கள் டி.வி.யில் பார்த்து ரசிப்பார்கள். உலகளில் உள்ள எல்லா மூலைகளிலும் இந்த தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இதனால் இந்த தொடரை ஒளிப்பரப்ப பில்லியன் பவுண்டு கணக்கில் பணத்தை செலவழிக்கிறது தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மூன்று வருடத்திற்கு உள்நாட்டில் மட்டும் இந்த தொடர் ஒளிப்பரப்புவதற்கான உரிமம் 5.1 பவுண்டுக்கு (41,438.47 கோடி ரூபாய்) விற்கப்பட்டுள்ளது.

இந்த வருட சீசனில் (2016-17) செல்சியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு சுமார் 150 மில்லியன் பவுண்டு டி.வி. உரிமம் மூலம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற லெய்செஸ்டர் 93 மில்லியன் பவுண்டு மட்டுமே பெற்றிருந்தது. தற்போது 116 மில்லியன் பவுண்டு பெற்றுள்ளது.

2-வது இடம் பிடித்த டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 145 மில்லியன் பெற்றுள்ளது. இந்த சீசனில் இடம்டிபித்துள்ள 20 அணிகளுக்கு ஒளிப்பரப்பு உரிமம் மூலம் கிடைத்த வருமானத்தில் 2.4 பில்லியன் பணத்தை பகிர்ந்தளித்துள்ளது.