செய்திகள்

ஹிகுவைனை ரூ.740 கோடிக்கு விலைபேசிய செல்சியா: மறுத்தது யுவான்டஸ்

இத்தாலியின் முன்னணி கால்பந்து கிளப் அணியான யுவான்டஸில் விளையாடும் ஹிகுவைனை ரூ. 740 கோடி ரூபாய்க்கு கேட்டது செல்சியா.

மாலை மலர்

29 வயதாகும் ஹிகுவைனை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அணியான செல்சியா 740.5 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் பீஸ் கொடுத்து வாங்க தயாராக இருந்தது. ஆனால் யுவான்டஸ் அணி அவரை விடுவிக்க தயாராக இல்லை என்று கூறிவிட்டது.

ஏற்கனவே ரொமேலு லுகாகுவை வாங்க முயற்சி செய்தது செல்சியா. ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.