தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய 3 அணிகளுக்கிடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டு தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao