சந்திரசேகரராவ் 
செய்திகள்

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சந்திரசேகரராவ் கோரிக்கை

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் கவுரமிக்க விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகர்ராவ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐதராபாத் :

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் 100வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னாள் பிரதமரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவாக ஓராண்டு விமரிசையாக கொண்டாடப்படும் என தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகர்ராவ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தலைநகர் ஐதராபாத்தில் முதல்மந்திரி சந்திரசேகர்ராவ் நேற்று இந்த நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய சந்திரசேகர்ராவ் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் கவுரமிக்க விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தெலுங்கானா சட்டசபை மற்றும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு பி.வி நரசிம்மராவின் பெயர் சூட்டப்படும் என சந்திரசேகர் ராவ் கூறினார்.