செய்திகள்

திருப்பதி கோவிலை கைப்பற்ற மத்திய அரசு சதி செய்கிறது- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு சதி செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். #TirumalaTemple #ChandrababuNaidu​​​​​​​

மாலை மலர்

ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு திருப்பதி கோவில் நிர்வாகத்தை கையகப்படுத்த சதிதிட்டம் தீட்டுகிறது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதிதிட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம். கோவிலை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. சதிதிட்டம் நிறைவேறாது. திருப்பதி பாலாஜியின் அருளால்தான் கடந்த 2003-ம் ஆண்டு பயங்கரமான தாக்குதலில் உயிர் தப்பினேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க அனுமதிக்கமாட்டேன்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டுக்கு டெல்லிக்கு சென்றேன், மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு நிதி கேட்டேன். ஆனால் அவர்கள் வழங்கவில்லை, மாறாக நமக்கு துரோகம் செய்துவிட்டார்கள்.