வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் சண்டிகா ஹதுருசிங்கா. இவர் வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இவரது தலைமையில் வங்காள தேச அணி சிறப்பாக செயல்பட்டது. ஹதுருசிங்கா கடந்த அக்டோபர் மாதம் வங்காள தேச தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஹதுருசிங்கா இலங்கையின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் ஹதுருசிங்கா இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மூன்று வருடங்கள் செயல்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அணி தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. 20-ந்தேதி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அப்போது ஹதுருசிங்கா இலங்கை அணியுடன் இணைய இருக்கிறார். ஜனவரி மாதம் இலங்கை அணி வங்காள தேசம் செல்கிறது. அப்போது முழுத்தொடருக்கும் சண்டிகா ஹதுருசிங்கா பயிற்சியாளராக செயல்படுவார்.
ஹதுருசிங்கா ஏற்கனவே இந்தியா ‘ஏ’ பயிற்சியாளராகவும், இலங்கை அணியின் துணை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.