செய்திகள்

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு முடிவு - சண்டிகார் மாணவர் முதல் இடம்

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் சண்டிகாரைச் சேர்ந்த மாணவர் சர்வேஷ் மெக்தானி முதல் இடம் பெற்று இருக்கிறார்.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), என்.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடைபெறும் நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ. அட்வான்ஸ்டு) கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளில் மிக கடினமான தேர்வு என கருதப்படும் இந்த தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 540 பேர் எழுதினார்கள்.