சென்னை:
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் தேவாலாவில் 5 செ.மீ., சின்ன கல்லாறில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்றும் அதிகாரி தெரிவித்தார்.