சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கார்டிப்பில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கையும், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை ‘சேசிங்’ செய்து சாதனை படைத்தது. இதே போல் பாகிஸ்தானும் ஒரு வெற்றி (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒரு தோல்வி (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது.