கார்டிப் :
8-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின.
‘நம்பர் ஒன்’ அணியான தென்ஆப்பிரிக்கா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் நியூசிலாந்து, இலங்கை அணிகள் வாய்ப்பை இழந்து நடையை கட்டின.
இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: அலெக்ஸ் ஹாலெஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க் வுட், ஜாக் பால்.
பாகிஸ்தான்: அசார் அலி, பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம், ரம்மன் ரயீஸ், ஷதப் கான், ஹசன் அலி, ஜூனைட் கான்.