சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள். சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரு ஆசிய அணிகள் மல்லுகட்டுவது இது 2-வது நிகழ்வாகும்.
இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் இந்தியாவும், இலங்கையும் மோதி இருந்தன. இதை மையப்படுத்தி இந்திய முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி டுவிட்டரில் ‘ஒரு ஆசிய கோப்பை இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடக்கப்போகிறது. இப்படி நடக்கும் என்று யாராவது கனவு கண்டு இருப்பார்களா?’ என்று கூறியுள்ளார்.