மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ரோமா அணி உக்ரைன் நாட்டின் ஷக்தார் டன்ஸ்க் அணியை எதிர்கொண்டது. இதில் பலம் வாய்ந்த ரோமா 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இந்த போட்டிகளுக்கு முன் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - செல்சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. பார்சிலோனா சார்பில் மெஸ்சி கோல் அடித்தார். சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஸ் போட்டியில் செல்சி அணியை எதிர்த்து மெஸ்சி அடிக்கும் முதல் கோல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - பெசிக்டாஸ் அணிகள் மோதின. இதில் பேயர்ன் முனிச் 5-0 என வெற்றி பெற்றது.