செயின் பறிப்பு 
செய்திகள்

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

தூத்துக்குடி அருகே பெண் கழுத்தில் கிடந்த தாலி செயினை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முள்ளக்காடு:

தூத்துக்குடி முத்தையாபுரம் சாந்திநகரை சேர்ந்தவர் பேரின்பம். இவரது மனைவி கவிதா (38). நேற்று இரவு சுயஉதவிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கவிதா குமாரசாமி நகருக்கு சென்றார். பின்னர் கூட்டம் முடிந்ததும் சாந்தி நகருக்கு திரும்பி வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர் பாரதிநகர் 4-வது தெரு அருகே வரும்போது கவிதா கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்து கொண்டு, தயாராக நின்றிருந்த மற்றொரு மர்ம நபரின் பைக்கில் தப்பி சென்றார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  

இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT