கோப்புப்படம் 
செய்திகள்

பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி - தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதமானது

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த (2019) ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

நாட்டின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.